search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை தனியார் மருத்துவமனை"

    மதுரையில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
    மதுரை:

    தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது ஜனநாயக மரபுக்கு எதிரானது. மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து இன்று (சனிக்கிழமை) தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை 6 மணிக்கு வேலை நிறுத்தம் தொடங்கியது. மாலை 6 மணி வரை வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள 100 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கிளீனிக்குகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணி புரிகின்றனர். அவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.

    வேலை நிறுத்தம் காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற அதிகளவில் வந்திருந்ததை காண முடிந்தது. #tamilnews
    ×